இலங்கை ஜனாதிபதி தேர்தல் : சஜித்திற்கு ஆதரவு வழக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணி!
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைமையிலான தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தற்போது இடம்பெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பொலிட்பீரோவின் ஏகோபித்த முடிவின்படி இவ்வருட ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு.சஜித் பிரேமதாசவுக்கு எமது ஆதரவையும் பூரண பங்களிப்பையும் வழங்குவோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தல் எங்கள் பொலிட்பீரோவின் முடிவின்படி, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம்.
(Visited 10 times, 1 visits today)





