பாரிஸ் ஒலிம்பிக் போட்டி : நோவக் ஜோகோவிச் படைத்த சாதனை!
உலக டென்னிஸ் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான வீரராக திகழ்ந்து, உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் நேற்று (04) பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை தோற்கடித்தார்.
37 வயதான நோவக் ஜோகோவிச் மற்றும் 21 வயதான கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் ஒலிம்பிக் வரலாற்றில் மிகவும் வயதான மற்றும் இளைய இறுதிப் போட்டியாளர்களாக ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.
இறுதிப் போட்டிகள் மிகவும் கடினமாக இருந்தாலும், அனுபவம் வாய்ந்த ஜோகோவிச் முதல் இரண்டு சுற்றுகளை 7-6 மற்றும் 7-6 என்ற கணக்கில் வென்று தனது 21 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையின் மிகப்பெரிய கனவான ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்ல முடிந்தது.
24 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டங்களை வென்ற ஜோகோவிச், தனது வெற்றிப் பட்டியலில் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் சேர்த்து டென்னிஸ் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான வீரரானார்.
ஐந்தாவது முயற்சியில் அவர் இந்த தங்கப் பதக்கம் வென்றது சிறப்பு. போட்டிக்கு பிறகு ஜோகோவிச் கூறுகையில், இந்த தங்கப்பதக்கம் தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்