பிரித்தானியாவில் அவசரமாக ஒன்றுக்கூடும் முக்கியஸ்தர்கள் : மசூதிகளுக்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!
பிரித்தானியாவில் நிலவிவரும் தொடர் போராடங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை தொடர்ந்த கோப்ரா கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டவுனிங் ஸ்ட்ரீட் இன்று கோப்ரா கூட்டத்தை நடத்த உள்ளது. ஆறாவது நாளாக சீர்கேடுகள் அதிகரித்து வருகின்ற நிலையில் போராட்டக்காரர்கள் புகலிடக் கோரிக்கையாளர்களின் ஹோட்டல்களையும் தாக்க முயன்றுள்ளனர்.
இந்நிலையிலேயே கோப்ரா கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோப்ரா, வைட்ஹாலில் உள்ள கேபினட் ஆபிஸ் ப்ரீஃபிங் ரூம் A எனப் பெயரிடப்பட்டது.
இது அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் பிற பொருத்தமான நபர்கள் கூடி ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு அவசரகால பதிலளிப்பு திட்டத்தை விவாதிக்கும் குழுவாகும்.
இன்றைய கூட்டத்தில், வரும் நாட்களில் கலவரம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் காவல்துறை பிரதிநிதிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதற்கிடையில் போராட்டக்காரர்கள் தகுந்த விலை கொடுக்க வேண்டியேற்படும் என பிரதமர் கெய்ர் ஸ்டாமர் எச்சரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வழிபாட்டுத் தலங்கள் மீதான மேலும் தாக்குதல்களின் அச்சுறுத்தலை விரைவாகச் சமாளிக்க வடிவமைக்கப்பட்ட புதிய “விரைவான பதில் செயல்முறையின்” கீழ் மசூதிகளுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்படும் என்று உள்துறை அலுவலகம் ஏற்கனவே அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.