ஜெர்மனியில் சிறுவர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – விடுக்கப்பட்ட கோரிக்கை
ஜெர்மனியில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்படுவதில் அதிகரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் சிறுவன் அல்லது சிறுமி குற்றவியல் சம்பவத்தில் ஈடுப்படால் அவர்கள் 14 வயது நிறைவடைந்த பின் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.
தற்பொழுது 14 வயதுக்குட்பட்டவர்களுடைய குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் இந்த வயது எல்லையை குறைத்தல் வேண்டும் என்று பல அரசியல் வாதிகள் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு இவ்வகையாக 93000 சம்பவங்கள் சிறுவர் சிறுமிகளால் ஏற்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளால் ஏற்படுத்தப்பட்ட குற்றவியல் சம்பவங்களின் எண்ணிக்கையானது 104000 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த சம்பவங்களின் சதவீதமானது 12 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஹோல்டன் பேர்க் பிரதேசத்தில் இரண்டு 12 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் 13 வயதுடைய சிறுமியை கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.