கேரள மண்சரிவில் சிக்கி காட்டுயானையால் உயிர் பிழைத்த சம்பவம்
கேரள மண்சரிவில் காட்டு யானையொன்று முதியவர் ஒருவரையும் அவரது பேத்தியையும் காப்பாற்றிய சம்பவம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300இற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், முண்டகையில் உள்ள தேயிலை தோட்டத்தில 18 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளி சுஜாதா அனிநஞ்சிரா தனது குடும்பத்தினருடன் கேரளாவில் வசித்து வந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் வீட்டை தண்ணீர் சூழ ஆரம்பித்த வேளையில் அங்கிருந்து அருகில் உள்ள குன்றுக்கு தப்பித்து காபி மரங்களால் மூடப்பட்ட குன்றில் காட்டு யானைகள் கூட்டம் அதிகமாக நின்றிருந்தது.
அத்தனை காட்டு யானைகளுடன் இரவு பொழுது முழுவதையும் பயத்துடன் கழித்தோம். மறுநாள் காலையில் மீட்புக் குழுவினர் எங்களை வந்து மீட்கும் வரை யானை எங்களை எதுவும் செய்யாமல் இரவு முழுவதும் எங்களை பாதுகாப்பதற்காக அங்கேயே நின்றிருக்கிறது.
இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளதுடன் பரவலாக பேசப்பட்டு வருகிறது.