ஜேர்மனியின் புகழ்பெற்ற பந்தய பாதையில் வெடி விபத்து : பலர் படுகாயம்!

ஜேர்மனியின் புகழ்பெற்ற நுர்பெர்கிரிங் பந்தயப் பாதையில் உள்ள பேடாக் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு சுருக்கப்பட்ட காற்று குப்பி வெடித்ததால் இந்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
NLS4 பந்தயத்திற்கு முன்னதாக சோதனை மற்றும் செட்-அப் ஓட்டத்தின் போது பாதையின் பேடாக் பகுதியில் உள்ள குழிக்கு பின்னால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைகைளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 22 times, 1 visits today)