இலங்கை ஜனாதிபதி தேர்தல் : மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அழைப்பு!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி இன்று (03) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு பல்வேறு தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் திங்கட்கிழமை கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.





