துருக்கியில் Instagram முடக்கம் – குழப்பத்தில் மக்கள்
துருக்கியில் Instagram சமூக ஊடகத் தளத்தைத் தடை செய்துள்ளதாக அந்நாட்டின் தேசியத் தொடர்பு அமைச்சு விளக்கம் கொடுக்காமல் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
துருக்கியில் உள்ள பலர் Instagram பக்கத்தைப் புதுப்பிக்க முடியவில்லை, பயன்படுத்த முடியவில்லை என்று X தளத்தில் பதிவிட்டிருந்தனர். அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Instagram குறித்து துருக்கி உயரதிகாரி ஒருவர் தணிக்கை பற்றி அண்மையில் குறை கூறியிருந்தார்.
மறைந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவுக்கு அஞ்சலி செலுத்தும் பதிவுகளை மக்கள் வெளியிட விரும்புவதாகவும் அதை நிறுவனம் தடுப்பதாகவும் அவர் சொல்லியிருந்தார்.
ஹமாஸ் தலைவர் ஹனியே துருக்கியே அதிபர் ரிசப் தயிப் எர்துவானுக்கு மிகவும் நெருக்கமானவர்.
சென்ற புதன்கிழமை ஈரானில் ஹனியே கொல்லப்பட்டார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். ஆனால் இஸ்ரேல் அது பற்றி இன்னமும் கருத்துரைக்கவில்லை.