‘Corse’ தீவுப்பகுதிக்கு செல்லும் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Cores பிராந்திய சுகாதார நிறுவனம் ஒரு அவதான அறிவித்தலை இன்று விடுத்துள்ளது,
தீவில் இரைப்பை குடல் அழற்சி நோயை ஏற்படுத்தும் ‘noro’ வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது எனவும், மக்கள் மிகுந்த சுகாதாரத் தன்மைகளை கடைப்பிடித்து அவதானமாக இருக்கும் படியும் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு அங்கு தங்கியிருந்த சுமார் பதினைந்து இளைஞர்கள் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் E Capanelle தங்குமிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
எனவும் சுகாதார மையம் மேலும் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு வாரங்களில் 250க்கும் மேற்பட்ட மக்கள் குறித்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்
(Visited 3 times, 1 visits today)