தேர்தல் தரவுகளை வெளியிட தயார் – வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ
வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தனது நாட்டின் சர்ச்சைக்குரிய தேர்தலின் அனைத்து வாக்கு எண்ணிக்கையையும் முன்வைக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மதுரோ வெற்றி பெற்றதாக தேசிய தேர்தல் கவுன்சில் (CNE) அறிவித்தது இரண்டு நாட்களாக எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது.
நாட்டின் எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கைகள் அதன் வேட்பாளர் எட்மண்டோ கோன்சாலஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகக் தெரிவிக்கின்றன.
எதிர்ப்பு தொடர்பான வன்முறைகளில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர்களிடம் பேசிய திரு மதுரோ, தேர்தல் முடிவுகளை வெளியிடாததற்கு தனது அரசாங்கம் தேர்தல் கவுன்சில் இணையதளத்தில் “ஹேக்” செய்ததே காரணம் என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ “வன்முறைக்கு” பின்னால் இருந்தார் என்பதற்கு தன்னிடம் “ஆதாரம்” இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.