தென்னிந்திய நிலச்சரிவு : பல சிரமங்களை எதிர்கொள்ளும் மீட்பு பணியாளர்கள்!

தென்னிந்தியாவில் குறைந்தது 151 பேரைக் கொன்ற நிலச்சரிவில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் இன்றும் (31.07) சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மலைப்பகுதிகளைத் தாக்கிய இந்த நிலச்சரிவில் பலர் காயமடைந்துள்ளனர்.
300 க்கும் மேற்பட்ட மீட்பாளர்கள் சேறு மற்றும் குப்பைகளுக்கு அடியில் சிக்கியவர்களை வெளியே இழுக்க போராடி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தடைசெய்யப்பட்ட சாலைகள் மற்றும் நிலையற்ற நிலப்பரப்பு அவர்களின் முயற்சிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
(Visited 17 times, 1 visits today)