வட அமெரிக்கா

அமெரிக்க விமானத்தில் ஏற்பட்ட விபரீதம் – ஒரு பயணியால் நேர்ந்த கதி

United Airlines விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

ஒருவருக்கு ஏற்பட்ட உடல்நல கோளாறினால் விமானிகள் வாந்தி எடுக்கும் நிலை நேரிட்டது.

அதனால் விமானம் அவசரமாக வெர்ஜினியா (Virginia) மாநிலத்தில் தரையிறங்கியதுடன் அங்கு விமானம் சுத்தம் செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை அந்த விமானம் அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்திலுள்ள ஹியூஸ்டன் (Houston) நகரிலிருந்து புறப்பட்டது.

2 மணி நேரத்திற்குப் பிறகு விமானம் Washington Dulles அனைத்துலக விமான நிலையத்திற்குச் சென்றது.

அந்த விமானம் அமெரிக்காவின் மெசச்சூசட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ள Boston Logan அனைத்துலக விமான நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது சம்பவம் நிகழ்ந்தது.

விமானத்தில் பயணம் செய்தோர் முகக்கவசங்களைக் கேட்டுள்ளனர். விமானத்தை நன்கு சுத்தம் செய்த பிறகு அது போஸ்தன் நகருக்குப் புறப்பட்டது.

இதற்குமுன்னர் டெல்தா விமானத்தில் கெட்டுப் போன உணவால் பயணி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். அதனால் விமானம் நியூயார்க்குக்குத் திருப்பிவிடப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் விமானக் கழிப்பறையில் ஏற்பட்ட அடைப்பினால் அமெரிக்க விமானம் ஒன்று சான் பிரான்சிஸ்கோவுக்குத் (San Francisco) திரும்பியது.

(Visited 21 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!