இலங்கையர்களுக்கு கனடா உட்பட பல நாடுகளில் வேலை வாய்ப்பு – ஏமாற்றிய பெண்கள்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி ஏமாற்றும் மோசடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
கடந்த 5 நாட்களில் 12 மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கட்டார், நியூசிலாந்து, மலேசியா, ருமேனியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி குருநாகல் மற்றும் பல பகுதிகளில் பணத்தை ஏமாற்றிய குழுவில் ஐந்து பெண்களும் அடங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அந்த முகமையின் சிறப்பு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இந்த சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
(Visited 36 times, 1 visits today)