இலங்கை ஜனாதிபதி தேர்தல் – தமிழரசு கட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.
எனினும் ஜனாதிபதி தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று காலை (26) வெளியிட்டது.
இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் எனவும் இது தொடர்பான வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா பிணைப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளார்.
ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று (26) காலை அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.