கூகுள் பயனாளர்களுக்கு நிபுணர்கள் விடுக்கும் கோரிக்கை
மிகவும் பிரபலமான கூகுள் ப்ரௌசர் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது.
கூகுள் பயனர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது. ஜிமெயில், ப்ளே ஸ்டோர், கூகுள் போட்டோஸ், கூகுள் மீட் எனப் பல்வேறு வசதிகளை வழங்குகிறது. குறிப்பாக ஜிமெயில் அனைத்து தரப்பினரும் தினமும் பயன்படுத்தும் சேவையாகும்.
அப்படி இருக்க, கூகுள் அக்கவுண்ட்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது மிகவும் முக்கியம். போன், லேப்டாப், கணினி என எல்லாவற்றிலும் உங்கள் கூகுள் அக்கவுண்டை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். அந்த வகையில் கூகுள் அக்கவுண்ட் சேவையின் பாஸ்வேர்ட்டை அவ்வப்போது மாற்றுவது ஹேக்கிங் பிரச்சனைகளில் இருந்து தடுக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கூகுள் அக்கவுண்ட் பாஸ்வேர்ட்டை சீரான இடைவெளியில் மாற்றுவது உங்கள் அக்கவுண்ட் மற்றவர்களால் ஹேக் செய்வதில் இருந்து தடுக்கப்படும். அக்கவுண்ட் பாதுகாப்பு அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில், கூகுள் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் மாற்ற, 1. உங்கள் போனில் டிவைஸ் செட்டிங்கிற்கு செல்லவும். 2. “Google” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து “Manage your google Account” என்பதை தேர்வு செய்யவும் 3. அதில் Security என்ற ஆப்ஷனை தேர்வு செய்து பாஸ்வேர்ட் என்ற ஆப்ஷனுக்கு சென்று “Change Password” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உங்களது புதிய பாஸ்வேர்டை கொடுத்து மாற்றலாம்.