இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து நுவான் துஷார விலகல்

இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தத் தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 27ம் தேதி நடக்க உள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நுவான் துஷாரா காயம் காரணமாக விலகி உள்ளார்.
அவருக்கு பதிலாக தில்ஷன் மதுஷனகா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
(Visited 22 times, 1 visits today)