பிரான்ஸ் தலைநகரில் தீவிர பாதுகாப்பு – 75,000 இராணுவத்தினர் பணியில்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் பொலிஸார் மற்றும் ராணுவத்தின் எண்ணிக்கை 75,000 என தெரியவந்துள்ளது..
வீதிகள் மற்றும் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, மேலும் சாலைத் தடைகளின் எண்ணிக்கை 44,000 க்கும் அதிகமாக உள்ளது.
பிரான்சில் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தை சுற்றியுள்ள பகுதியை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது பிரான்சில் முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு நடவடிக்கை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக பரிஸுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் வரும் வெள்ளிக்கிழமை திறப்பு விழாவுக்குப் பிறகு பல பாதுகாப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்படும் என்று பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.