இலங்கையில் நீர் தாங்கி ஒன்றில் சிக்கிய மர்மம் – சுற்றிவளைத்த பொலிஸார்
மினுவாங்கொடை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கிரிபுதா எனப்படும் தாகொன்னே அவிஷ்கவிடம் இருந்து ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மினுவாங்கொடை, தொட்டிலகஹவத்த, அலுதேபொல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இது கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 22 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தகோன்னே அவிஷ்கா அல்லது கிரிபுதா, பெரிய அளவிலான போதைப்பொருள் வியாபாரி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மாவின் சீடர் ஆவார்.
இந்த சுற்றிவளைப்பில் 01 கிலோ 70 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் நீர் தாங்கி ஒன்றில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.