ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் விசேட கடிதம்

உத்தேச ஓரினச் சேர்க்கை சட்டமூலம் தொடர்பான கடிதமொன்றை மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உத்தேச சட்டமூலம் சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் ஒழுக்கக்கேடானது என்று மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
குறுகிய தன்னிச்சையான நிலைப்பட்டில் ஆட்சி செய்யும் போது அரசங்கம் அராஜகத்தை நோக்கி பயணிக்கும் எனவும் சமூகத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என சக்கவட்டி சிஹானாத சூத்திரத்தில் ததாகதயன் விளக்கியிருப்பதாக மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கிணங்க, நடைமுறைப்படுத்த முடியாத, நெறிமுறையற்ற இந்த சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்ப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 34 times, 1 visits today)