இந்திய நட்சத்திரங்களின் ஓய்வை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
இலங்கையின் இடைக்கால பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா, எதிர்வரும் டி20 தொடரில் இந்தியாவின் மூன்று மெகா ஸ்டார்கள் இல்லாததை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தனது வீரர்களை வலியுறுத்தியுள்ளார்.
கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கடந்த மாதம் டுவென்டி 20 உலகக் கோப்பையை வென்ற பிறகு குறுகிய வடிவத்தில் இருந்து ஓய்வு பெற்றனர்.
“ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் உலகின் சிறந்த வீரர்கள். அவர்களின் திறமை மற்றும் அவர்கள் விளையாடிய கிரிக்கெட்டைப் பார்க்கும்போது, ஜடேஜாவுடன் சேர்ந்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்” என்று ஜெயசூர்யா கூறினார்.
“அவர்கள் இல்லாதது இந்திய அணிக்கு இழப்பாகும், அதிலிருந்து நாங்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெற வேண்டும்.”
டி20 உலகக் கோப்பையில் இருந்து இலங்கை முதல் சுற்றிலேயே வெளியேறியதைத் தொடர்ந்து, கிறிஸ் சில்வர்வுட் ராஜினாமா செய்ததை அடுத்து, இடைக்கால பயிற்சியாளராக ஜெயசூர்யா பொறுப்பேற்றார்.
இப்போட்டியில் இலங்கை அணியை வழிநடத்திய வனிந்து ஹசரங்கவுக்கு பதிலாக சரித் அசலங்க கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக் கிண்ண அணியில் இடம்பெறாத குசல் பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரை இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை லங்கா பிரீமியர் லீக் போட்டியில் சிறப்பாகச் செயற்பட்ட சமிந்து விக்ரமசிங்க அணியில் இடம்பெறவில்லை.
16 பேர் கொண்ட அணியில் முதலில் பெயரிடப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டுவென்டி 20 மற்றும் ஒருநாள் சர்வதேச தொடரில் இருந்து விலகியுள்ளார்,.
அவருக்கு பதில் வீரர் விரைவில் அறிவிக்கப்படும் என்று இலங்கையின் தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா கூறினார்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2, ஆகஸ்ட் 4 மற்றும் ஆகஸ்ட் 7 ஆகிய தேதிகளில் கொழும்பில் நடைபெறும்.