இலங்கை: 2025 சாதாரதரப் பரீட்சை! கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள இரண்டு முக்கிய அறிவிப்புக்கள்
அண்மைய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 2025 O/L பரீட்சைகள் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிடிபன களஞ்சியசாலையில் பாடநூல் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் உயர்தர மற்றும் ஏனைய பரீட்சைகளை முன்னதாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பரீட்சை கால அட்டவணையை புதுப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் O/L, A/L மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அண்மைய க.பொ.த சா/த பரீட்சைக்கு பின்னர் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட உயர்தர வகுப்புகளுக்கான கற்கைகள் தற்போது வெற்றிகரமாக முன்னேறி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.