இலங்கை செய்தி

கண்டியில் டீக்கு கசிப்பு விற்பனை செய்துவந்த ஹோட்டல் உரிமையாளர் கைது

கண்டி மத்திய சந்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பல காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த கசிப்பு மோசடி தொடர்பான விபரங்களை கண்டி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (22) கண்டுபிடித்துள்ளனர்.

அந்தச் சோதனையில் 08 காசிப்புப் போத்தல்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோட்டலின் உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த ஊழியர் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையின் சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் நாட்டு பானங்களின் போத்தல்களில் கசிப்பை வைத்து நீண்ட காலமாக இந்த கடத்தலை மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது.

மேலும், வாங்குபவர் ஒருவர் ஹோட்டலுக்கு வந்தபோது, ​​ஒரு கோப்பையில் வைத்து கசிப்பு கொடுத்ததாகவும், அந்த இடத்தில் தினமும் சுமார் 10 பாட்டில்கள் கசிப்பு விற்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கண்டி மத்திய சந்தைக்கு வரும் லொறிகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் நாட்டாமிகள் அதிகாலை 5.00 மணியளவில் கசிப்பு அருந்தத் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி காவற்துறையினர் இந்த கசிப்பு கடத்தலை மிக இரகசியமாக நீண்ட காலமாக கண்காணித்து வந்ததுடன்,  கண்டி மாநகர சபையும் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை