அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – பைடனின் முடிவுக்கு உலகத் தலைவர்கள் பாராட்டு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகும் ஜோ பைடனுக்கு உலகத் தலைவர்கள் பாராட்டுகளை தெரிவித்து எடுத்துள்ளனர்.
பைடன் அதிக மரியாதைக்குரியவர் என்று கூறிய பல தலைவர்கள், அவரின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஜெர்மன் பிரதமர் ஒலாப் ஷோல்ஸ் (Olaf Scholz) பைடனின் சாதனைகளைப் புகழ்ந்தார். போட்டியிலிருந்து விலக அவர் எடுத்திருக்கும் முடிவும் பாராட்டத்தக்கது என்று ஷோல்ஸ் கூறினார்.
அமெரிக்கர்களின் நலனை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட கடினமான முடிவு அது என்று நம்பவதாக பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டாமர் கூறினார்.
கனடாவின் உண்மையான தோழனாக இருந்ததற்காக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ பைடனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
ஜனநாயகக் கொள்கைகள்மீது திரு பைடன் கொண்டுள்ள கடப்பாட்டை ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி (Anthony Albanese) பாராட்டினார்.
நிலைமையைக் கண்காணித்து வருவதாக ரஷ்யா தெரிவித்தது. அமெரிக்க ஜனாதிபதி நடைபெற சுமார் 4 மாதங்கள் உள்ள வேளையில், இந்தக் காலக்கட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, தமது நாட்டிற்கு ஆதரவு அளிக்க தைரியமான நடவடிக்கைகளை எடுத்த பைடனுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.