ஜெர்மனியில் குடியேறிய இலங்கையர்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்கள்
ஜெர்மனியில் குடியேறிய வெளிநாட்டவர்களின் புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் இவ்வாறு குடியேறியுள்ளனர். ஜெர்மன் புள்ளி விபர திணைக்களம் ஜெர்மனிக்குள் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் தொடர்பான புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.
தற்பொழுது ஜெர்மனியில் மொத்தமாக 15.6 மில்லியன் மக்கள் புலன் பெயர்ந்த பின்னணியை கொண்டவர்களாக புள்ளி விபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டில் குடியேறியவர்களில் 2.5 மில்லியன் மக்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.
ஜெர்மனிய நாட்டில் குடியேறியவர்களில் ஆண்களை விட கூடுதலாக பெண்களே காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
ஜெர்மனியர்களின் சராசரி வயதானது 37 வயதாக இருக்கும் பொழுது குடியேறியவர்களின் சராசரி வயது மிகவும் குறைவாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு ஜெர்மனியில் குடியேறியவர்களில் 12 சதவீதமானவர்கள் போலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் 9 சதவீதமாக காணப்படுவதாகவும், ரஷ்யாவில் இருந்து குடியேறியவர்கள் ஜெர்மன் நாட்டில் மொத்தமானவர்களின் தொகையில் 7 சதவீதமாக காணப்படுவதாக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.