பங்களாதேஷில் தீவிரமடையும் வன்முறைச் சம்பவங்கள் – ஊரடங்குச் சட்டம் அமுல்
பங்களாதேஷில் நாடு தழுவிய ரீதியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது.
பங்களாதேஷின் அரச பணிக்கான ஒதுக்கீட்டில், கடந்த 1971ஆம் ஆண்டு இடம்பெற்ற விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் புதல்வர்கள் மற்றும் பேரன்களுக்கு 30 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளதுடன் இதன்போது வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து பங்களாதேஷில் இணையச் சேவைகள் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், சமூக ஊடகங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் நார்சிங்டி பகுதியிலுள்ள சிறைச்சாலையை முற்றுகையிட்டுள்ளனர்.
இதனையடுத்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பல கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு கடமைகளில் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.