செய்தி

தாய்லாந்தில் ஹோட்டல் அறைக்குள் சடலமாக மீட்கப்பட்ட 6 பேர் – அதிர்ச்சியில் பொலிஸார்

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள ஹோட்டலில் 6 பேர் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்து அந்நாட்டுக் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மூவர் ஆண்கள் எனவும் மூவர் பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது.

வியட்நாமியர்களான அவர்களில் சிலர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களாகும். அனைவரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தனித்தனியாக ஹோட்டலை அடைந்தனர்.

அவர்கள் வெவ்வேறு அறைகளைப் பதிவு செய்திருந்தனர். ஆனால் ஒரே அறையில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

அங்குச் சண்டை நடந்ததற்கான அடையாளம் ஏதும் காணப்படவில்லை. அவர்களுக்கு நஞ்சு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏழாவது நபரைத் தேடி வருவதாகத் தாய்லந்துக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய்ல்ந்துப் பிரதமர் செட்டா தவிசின் (Srettha Thavisin), சம்பவம் நடந்த ஹோட்டலுக்குச் சென்று பார்வையிட்டார்.

சுற்றுலாத்துறையில் பாதிப்பைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட அமைப்புகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!