பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்கள் 20 வீதம் குறைக்க முடியும் – அமைச்சர் காஞ்சனா
மின்சார விலை திருத்தத்துடன் ஒப்பிடுகையில் சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை சுமார் 20% குறைக்க முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் நாளில் நள்ளிரவில் அதிகரிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வர்த்தக சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உறுதியான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் இன்று (16) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டார்.
புதிய மின்சாரத் திருத்தத்தின் மூலம் 90 யூனிட்டுக்கும் குறைவாகப் பயன்படுத்தும் மக்களே அதிக நிவாரணம் பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.