அமெரிக்காவில் தனது செயல்பாடுகளை நிறுத்தும் ரஷ்ய நிறுவனம்!
உலகப் புகழ்பெற்ற ரஷ்ய வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவனமான Kaspersky, அமெரிக்காவில் தனது செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. வரும் 20ம் திகதி முதல் படிப்படியாக செய்யப்படும் என Kaspersky Lab அறிவித்துள்ளது.
இணைய இடத்தின் பாதுகாப்பு பிரச்சினைகளின் அடிப்படையில் இந்த ரஷ்ய நிறுவனத்தின் தயாரிப்புகளை அமெரிக்காவில் விற்பனை செய்வதை தடை செய்வதாக பிடன் நிர்வாகம் முன்பு அறிவித்திருந்தது.
அந்த முடிவு செப்டம்பர் 29 முதல் அமல்படுத்தப்படுவதற்கு முன்பே ரஷ்ய சைபர் பாதுகாப்பு நிறுவனம் தனது அமெரிக்க நடவடிக்கைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி, காஸ்பர்ஸ்கை வைரஸ் தடுப்பு மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது.
காஸ்பர்ஸ்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் தயாரிப்புகள் இனி அமெரிக்கர்களுக்கு கிடைக்காது என்று கூறியுள்ளது.
ரஷ்ய பன்னாட்டு நிறுவனமான Kaspersky Lab, வைரஸ் தடுப்பு தயாரிப்புகள், இணையப் பாதுகாப்பு மற்றும் கடவுச்சொல் மேலாண்மை உள்ளிட்ட கணினித் துறையில் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு மென்பொருள் தயாரிப்புகளை வழங்குகிறது.