தங்க ஆடை அணிந்த அம்பானியின் மருமகள்
பிரபல இந்திய தொழில் அதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் மிகப் பெரும் பொருட்செலவில் நடந்த மூன்று நாள் திருமணம் கடந்த 12ம் திகதி தொடங்கியது.
இங்கு பலரது கவனமும் ராதிகா மெர்ச்சண்ட் மீது குவிந்திருந்தது. அவர் ஒரு பாரம்பரிய லெஹங்கா அணிந்திருந்தார், மேலும் இந்த திருமண ஆடை உண்மையான தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் 1,200 விருந்தினர்கள் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் வணிக உலகின் உறுப்பினர்கள், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உரிமையாளர் பில கேட்ஸ் உட்பட கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன ஆகியோர் அம்பானியின் திருமண விழாவில் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் இலங்கையின் முன்னாள் சூப்பர் கிரிக்கட் வீரரும் முன்னாள் கேப்டனுமான சனத் ஜெயசூர்யாவும் இந்த திருமண விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகாவை வாழ்த்தி எழுதிய X குறிப்பில், தவிர்க்க முடியாத காரணங்களால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று சனத் தெரிவித்துள்ளார்.
சகாப்தத்தின் மிகப்பெரிய திருமணத்திற்காக மும்பையின் முக்கிய சாலைகள் ஒரு நாளைக்கு பல மணி நேரம் மூடப்பட்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜூன் மாதம், இத்தாலியில் இருந்து பிரான்ஸ் செல்லும் சொகுசுக் கப்பலில் திருமணத்திற்கு முந்தைய மற்றொரு நிகழ்வை அம்பானி குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தத் திருமணத்திற்காக 11 முதல் 13 பில்லியன் இந்திய ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.