துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டிரம்ப் மீண்டும் தேர்தல் மேடைக்கு வந்துள்ளார்
பென்சில்வேனியா தேர்தல் பேரணியில் துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பிய முன்னாள் ஜனாதிபதியும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், விஸ்கான்சின் மில்வாக்கி நகருக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மில்வாக்கியில் நடைபெறும் குடியரசுக் கட்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அவரின் இந்த விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 5ஆம் திகதி நடைபெறும் இந்த குடியரசுக் கட்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் முக்கிய வேட்பாளராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவார்.
மில்வாக்கி குடியரசுக் கட்சி மாநாடு பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது.
இதில் குடியரசு கட்சி உறுப்பினர்கள், கட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு டிரம்பை அதிகாரப்பூர்வ வேட்பாளராக நியமிப்பார்கள்.
பென்சில்வேனியா தேர்தல் பேரணியில் உரையாற்றும் போது, டிரம்ப் வலது காதில் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தார்.
டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் ட்ரம்பின் தனி விமானத்தில் மில்வாக்கி வந்தடைந்தபோது, டிரம்புக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படுமா இல்லையா என்பதில் பலரது கவனம் செலுத்தப்பட்டது.
பென்சில்வேனியாவின் பட்லர் கவுண்டியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் டிரம்பிற்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என ரகசிய சேவை அதிபர் காவலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.