ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி: இலங்கை ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சி தெரிவித்ததுடன், அவர் பாதுகாப்பாக இருப்பதாக அறிந்து நிம்மதியடைவதாக தெரிவித்துள்ளார்.
அரசியலில் இலங்கையர்களும் இவ்வாறான வன்முறைகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் சட்டங்களை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது கூட்டத்தில் இருந்த நபரொருவர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார்.
இந்த சம்பவத்தால் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.
(Visited 55 times, 1 visits today)