ஜெர்மனியில் வெளிநாட்டவர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – அரசாங்கம் எடுத்த நடவடிக்கை
ஜெர்மனிக்குள் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் அகதிகளை அனுமதிப்பது தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளன.
ஜெர்மனுக்குள் அனுமதித்த ஆப்கானிஸ்தான் அகதிகளால் பல்வேறு குற்றச்செயலகள் பதிவாகி உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஜெர்மனிக்கு ஆதரவாக செயற்பட்டவர்களை பாதுகாக்கும் நோக்கில் ஜெர்மனுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது.
தலிபான் அமைப்பினால் ஆபத்து ஏற்படலாம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டது.
எனினும் மிகவும் ஆபத்தான நபர்கள் ஜெர்மனுக்குள் நுழைந்துள்ளதால், நாட்டுக்கு பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் ஆப்கானிஸ்தான் அகதிகளை ஜெர்மனிக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பாகிஸ்தானிலுள்ள ஜெர்மன் தூதகரம் ஊடாக, ஆப்கானிஸ்தான் அகதிகளின் கோரிக்கைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இதன்போது பலர் ஆபத்தான செயற்பாடுகளில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான விசா அனுமதி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனியிலுள்ள சட்ட திட்டங்களுக்கு அமைய பெண்களுக்கு எவ்வாறான உரிமைகளை வழங்குவீர்கள் என்ற கேள்விகளுக்கு பலர் எதிராக தகவல்களை வழங்கியுள்ளனர்.
கடும்போக்கான சிந்தனைகளை கொண்ட பலரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.