இஸ்ரேல் தாக்குதலில் 71 பேர் பரிதமாக பலி! ஹமாஸ் இராணுவ பிரிவின் தலைவர் பலி

காசாவின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கான் யூனிஸ் பகுதியில் நடத்தப்பட்டுள்ள குறித்த தாக்குதலில் 289 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் நாசர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்போது ஹமாஸ் தரப்பின் இராணுவ பிரிவின் தலைவரான மொஹமட் டெயிப் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக இஸ்ரேல் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் மற்றுமொரு ஹமாஸ் தரப்பின் உயர் அதிகாரி ஒருவரும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 66 times, 2 visits today)