இலங்கை: அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்! வெளியான அறிவிப்பு
மோட்டார் வாகனங்களின் வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம் (VET) அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இவ்வாறான வாகனங்கள் தொடர்பான முறைப்பாடுகளை 070 3500 525 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்ப முடியும் என VET பணிப்பாளர் தசுன் கமகே தெரிவித்துள்ளார்.
வாகன சாரதிகள் தமது வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக புகை சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டாம் என கமகே வலியுறுத்தியுள்ளார். சிலர் நேர்மையற்ற முறையில் சான்றிதழைப் பெற முயற்சித்தாலும், காவல்துறை மற்றும் மோட்டார் வாகனத் திணைக்கள அதிகாரிகள் நாடு முழுவதும் முழுமையான சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
வாகனம் அதிக புகை வெளியிடுவதை அவதானித்தால், வாகன உரிமையாளருக்கு பராமரிப்பு உத்தரவு வழங்கப்படும் என்று அவர் விளக்கினார். இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், குறிப்பிட்ட வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.