அறிவியல் & தொழில்நுட்பம்

கை விரலில் தொழில்நுட்பம் – மோதிரத்தை அறிமுகம் செய்த Samsung

சாம்சங் நிறுவனம் புதிதாக ஒரு மோதிரத்தை வெளியிட்டுள்ளது, அதனது அம்சங்கள் மற்றும் விளைவிவரங்கள் பற்றி பார்க்கலாம்.

சாம்சங் நிறுவனம் புதிதாக பல அம்சங்கள் நிறைந்த வாட்ச், மொபைல் போன்கள், இதர கேட்ஜட்ஸ்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்கள். அதன்படி நேற்றைய நாளில் சாம்சங் புதிதாக இந்த சாம்சங் கேலக்ஸி ரிங் எனப்படும் ஒரு புதிய மோதிரத்தை வெளியிட்டுள்ளது. இதனால் சாதாரணமாக அல்லாமல் நம்முடைய உடலின் ஆரோக்யத்தை கண்காணிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு :

சாம்சங் வெளியிட்டுள்ள இந்த மோதிரமானது டைட்டானியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் நீரில் கூட எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த மோதிரம் வெறும் 2.3-3.0 கிராம் அளவிற்கு தான் உருவாக்கி இருக்கிறார்கள்.
இதனால் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
அம்சங்கள் :

  • சாம்சங்கின் ஹெல்த் ஆப்ஸுடன் (Health Option) ஆப் மூலம் இந்த மோதிரத்தை இணைப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தினமும் கவனித்துக் கொள்ளலாம்.
  • அதில் முக்கியமாக இதயத் துடிப்பை சரியாக இருக்கிறதா?, நன்றாக தூங்குகிறோமா?, பிபி (BP) போன்றவற்றை சரிபார்க்க வேண்டும் என்றால் அதை இப்போது இந்த சாம்சங் மோதிரத்தின் மூலம் செய்யலாம்.
  • மேலும் இதில் உடல் வெப்பநிலை சென்சாரும் உள்ளதால் நம் உடல் சூடானால் கூட இது நமக்கு தெரிவித்துவிடும் அந்த அளவிற்கு இதனது அம்சங்களை வடிவமைத்துள்ளது சாம்சங் நிறுவனம்.
  • சாம்சங் ரிங்கில் மேலும் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் இதில் AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது தான்.
  • இந்த AI மூலமாக தான் உடலை நம்மால் கண்காணித்து கொள்ள முடிகிறது.
  • இந்த ரிங்கால் சாம்சங் கேலக்ஸி போனையும் கட்டுப்படுத்தவும் முடிகிறது.
  • மேலும், இந்த ரிங் தொலைந்து விட்டாலோ அல்லது கண்ணுக்கு தென்படாமல் இருந்தாலோ ‘ஃபைன்ட் மை ரிங்’ எனும் ஆப்ஷன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.
  • இதில் இன்னோரு அம்சம் என்னவென்றால் ஒரு முறை இதில் சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு அது நீடிக்கும் திறனுடன் உருவாக்கி உள்ளனர்.
(Visited 44 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!