சிங்கப்பூர் நிறுவனங்களில் ஏற்படவுள்ள மாற்றம் – பயன்பாட்டிற்கு வரும் செயற்கை நுண்ணறிவுகள்
சிங்கப்பூர் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய,, அதனைப் பாதுகாப்பாகவும் பெரிய அளவிலும் பயன்படுத்துவது பற்றி ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கான ஆதரவை NCS தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த 3,000 செயற்கை நுண்ணறிவுப் பயிற்சியாளர்களும் 300 நிபுணர்களும் வழங்குவர்.
NCS நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat)அதனைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை வலுப்படுத்த திறன் வளர்ச்சி, திறன் புதுப்பிப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
அவற்றின்வழி புதிய திறனாளர்களை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கம் என்று திரு ஹெங் கூறினார். தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், NCS நிறுவனத்துடன் பணிபுரிந்து அந்த முயற்சிகளில் இறங்கும்.
(Visited 6 times, 1 visits today)