எதிர்காலத்தில் BRICS தனது சொந்த நாடாளுமன்றத்தை அமைக்கும் – புதின்
வருங்காலத்தில் பிரிக்ஸ் அமைப்பு சொந்தமாக நாடாளுமன்றத்தை அமைக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
“இதுவரை, பிரிக்ஸ் அதன் சொந்த நிறுவனமயமாக்கப்பட்ட பாராளுமன்றக் கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இந்த யோசனை நிச்சயமாக நிறைவேறும் என்று நான் நம்புகிறேன்,” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறிப்பிட்டார்.
குழுவின் பாராளுமன்ற மன்றம் போன்ற நிகழ்வுகள் உலகளாவிய விவகாரங்களில் BRICS இன் செல்வாக்கை வலுப்படுத்துவதோடு “உலகைப் பாதுகாப்பானதாகவும் மேலும் இணக்கமானதாகவும் மாற்ற” உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரஷ்ய ஜனாதிபதி, ஒன்றாகச் செயல்படுவதன் மூலம், சமீபத்தில் விரிவாக்கப்பட்ட குழு பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் அதன் திறனை வெளிப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
(Visited 6 times, 1 visits today)