உலக அமைதிக்கு அச்சுறுத்தல் – தென் கொரிய ஜனாதிபதி எச்சரிக்கை
உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தென் கொரிய ஜனாதிபதி யூ சுக் யோல் (Yoon Suk Yeol )கூறியுள்ளார்.
ஹவாயிக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள யூன் அவ்வாறு கூறினார்.
ரஷ்யாவுடன் வட கொரியா செய்துகொள்ளும் ஆயுத வர்த்தகமே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கப் படைகளுக்கும் தென் கொரிய படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைந்த தற்காப்புப் பயிற்சிகள் மிகவும் முக்கியம் என்று யூன் வலியுறுத்தினார்.
வட கொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடக்கும் சட்டவிரோத ஆயுத வர்த்தகம் கொரியத் தீபகற்பத்துக்கு மட்டுமல்ல அனைத்துலக ரீதியில் பேராபத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட கொரியா ரஷ்யாவுடன் கடந்த மாதம் செய்துகொண்ட இருதரப்புத் தற்காப்பு உடன்பாடு குறித்து யூன் கவலை தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு வடகொரியா புவியீர்ப்பு ஏவுகணைகளை விநியோகம் செய்வதாகத் தென் கொரியாவும் அமெரிக்காவும் கூறிவருகின்றன. ரஷ்யாவும் வட கொரியாவும் அதை மறுக்கின்றன.