அமெரிக்காவில் 120 டிகிரி பாரன்ஹீட்டில் பதிவான வெப்பநிலை : மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்பு!
மேற்கு அமெரிக்காவை தாக்கும் வெப்ப அலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தேசிய வானிலை சேவையின்படி, சுமார் 162 மில்லியன் மக்கள் அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் வெப்ப எச்சரிக்கையின் கீழ் உள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
இந்த வெப்ப அலையானது வாரம் முழுவதும் நீட்டிக்கும் எனவும் கூறப்படுகிறது.
லாஸ் வேகாஸ், நெவாடா ஆகிய பகுதிகளில் வெப்ப அலையானது 120 டிகிரி பாரன்ஹீட்டைப் பதிவுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சில பகுதிகளில் மின் வெட்டு தடைப்பட்ட நிலையில், மாநில அரசுகள் அவசர நிலையை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
(Visited 8 times, 1 visits today)