ஐரோப்பாவின் புதிய சாதனை : வெற்றிகரமாக ஏவப்பட்ட ஏரியன் 06
ஐரோப்பாவின் புதிய ராக்கெட் ஏரியன் 6 தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெற்றியடைந்தால் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிக்கு (ESA) மீண்டும் செயற்கைக்கோள்களை அனுப்பும் திறன் வலுப்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஐரோப்பாவின் ஸ்பேஸ்போர்ட்டில் இருந்து ஏரியன் 6 புறப்பட்டது.
இது செயல்பாட்டிற்கு வந்ததும், ஏரியன் 6 விண்வெளி ஏஜென்சியின் புதிய டாக்ஸியாக மாறும், குறைந்த சுற்றுப்பாதைக்கு, செயற்கைக்கோள்கள் மற்றும் உபகரணங்களை வளிமண்டலத்திற்கு வெளியே கொண்டு செல்ல முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)