ஜெர்மனியை விட்டு அதிகளவில் வெளியேறும் மக்கள்
ஜெர்மனியில் குடியேறுகின்றவர்களின் எண்ணிக்கையில் குறைவு காணப்படுவதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் நிகர குடியேற்றமானது கடந்த 2023 ஆம் ஆண்டு குறைவடைந்துள்ளதாக ஜெர்மனியின் புள்ளி விபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2023 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டினுள் குடியேறியவர்களின் எண்ணிக்கை மற்றும் ஜெர்மனியை விட்டு முற்றாக வெளியேறியவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் பொழுது இவ்வாறு மொத்தமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு கூடுதலான இவ்வகையான நிகர குடியேற்றங்கள் ஜெர்மன் நாட்டில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
அதாவது 2022 ஆம் ஆண்டு 1.46 மில்லியன் மக்கள் ஜெர்மன் நாட்டுக்குள் குடி பெயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மொத்தமாக குடியேறியவர்களின் எண்ணிக்கையானது 193300 பேராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு ஜெர்மன் நாட்டினுள் நிகர குடியேறியவர்களின் எண்ணிக்கை குறைவடைந்தமைக்கு காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு வருகின்ற அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உக்ரைன் நாட்டில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு வந்தவர்களின் எண்ணிக்கையானது 330000 ஆக காணப்படுகின்றது.
இந்நிலையில் ஆசிய கணண்டத்தில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு குடியேறியவர்களின் எண்ணிக்கை 287000 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில் உள்ள சில நகரங்களில் நிகர குடியேற்றம் நடைபெற்ற காரணத்தினால் அந்த நகரங்களில் சனத்தொகை பெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் புள்ளி விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.