இலங்கையில் நீர்த் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக பலி!
மீத்தெனிய பிரதேசத்தில் மூன்று வயதுடைய குழந்தையொன்று வீட்டின் நீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தாய் தனது ஒன்பது வயது குழந்தையையும், உயிரிழந்த மூன்று வயது குழந்தையையும் குளிக்க வைப்பதற்காக வீட்டிற்கு வெளியே உள்ள நீர் தொட்டி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் .
அங்கு ஒன்பது வயது குழந்தையை குளிக்க செய்துவிட்டு வீட்டினுள்ளே அழைத்து சென்ற தாய் மூன்று வயது குழந்தையை நீர் தொட்டிக்கு அருகில் அமர் வைத்து சென்றுள்ளார்.
வெளியே வந்த தாய் மூன்று வயது குழந்தையை தேடிய போது குழந்தை நீர் தொட்டிக்குள் விழுந்து கிடப்பதைக் பார்த்து மீத்தெனிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
(Visited 11 times, 1 visits today)




