ரஷ்யா, உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தைக்கு உதவ உலக நாடுகளுக்கு சீனா அதிபர் அழைப்பு
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஆர்பன் திங்கள்கிழமை பெய்ஜிங்க்கு விஜயம் செய்துள்ளார்.
“பிரதமர் விக்டர் ஓர்பனின் அமைதிப் பணி தொடர்கிறது” என்று பெர்டலான் ஹவாசி மேற்கோள் காட்டினார்.
ஜூலை தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழலும் தலைமைப் பதவியை ஹங்கேரி ஏற்றுக்கொண்டதிலிருந்து ஆர்பனின் மூன்றாவது ஆச்சரியமான வெளிநாட்டுப் பயணம் இதுவாகும், அவர் கடந்த வாரம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு பயணம் செய்தார்.
குறித்த விஜயத்தின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று நேரில் சந்தித்து பேசினார்..
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் மீண்டும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அமைதிக்கான தீர்வு எட்டப்பட வேண்டும். இதற்கு உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்று அதிபர் ஜின்பிங் கேட்டு கொண்டார் என சீனாவில் இருந்து வெளிவரும் சி.சி.டி.வி. என்ற அரசு ஊடகம் வெளியிட்டு உள்ள செய்தியில் தெரிவித்து உள்ளது.
அமைதி ஏற்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வ மற்றும் முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்ததற்காக சீனாவுக்கு ஆர்பன் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொண்டதுடன், உலகளாவிய குழப்பங்களுக்கு இடையே ஒரு நிலையான அரசாக சீனா இருந்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.