செய்தி

ஜப்பானை வாட்டி வதைக்கும் வெப்பம் – கடும் நெருக்கடியில் மக்கள்

ஜப்பானில் சுட்டெரிக்கும் கடுமையான வெப்பத்தால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கான்டோ, டோகாய் வட்டாரங்களின் உட்பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயர்வதாக ஜப்பானிய வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

மேபாஷி, சிச்சிபு நகரங்களில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியல் பதிவாகியதாக கணிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றால் ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவிலும் 25 வட்டாரங்களிலும் அதிகாரிகள் வெப்ப அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

போதுமான தண்ணீர் அருந்தும்படியும் கூடுமானவரை வீட்டிலேயே இருக்குமாறும் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.

தகிக்கும் வெப்பத்தால் நேற்று முன்தினம் விவசாயம் செய்துகொண்டிருந்த மூத்தோர் சிலர் மாண்டுகிடக்கக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!