பிரித்தானியா பொது தேர்தலில் வெற்றிபெற்ற 22 வயது இளைஞர்
சமீபத்தில் நடந்து முடிந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் 22 வயது இளைஞர் ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2002 இல் பிறந்த சாம் கார்லின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் இளைய உறுப்பினராகக் கருதப்படும், தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற இந்த இளைஞன் “நாடாளுமன்றத்தின் குழந்தை” என்று அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வடமேற்கு கேம்பிரிட்ஜ்ஷயர் தொகுதியில் 39 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சுமார் 22 வருடங்கள் அங்கம் வகித்த ஷைலேஷ் வாராவை தோற்கடித்து இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார் சாம்.
தனது வெற்றி அரசியலில் ஒரு சக்திவாய்ந்த புரட்சி என்றும், மேலும் மேலும் இளைஞர்கள் அரசியலில் சேர இது வழிவகுக்கும் என்றும் சாம் தெரிவித்துள்ளார்.