ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை காட்டுப்பூனை
ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு முனையத்திற்கு உரிய அனுமதியின்றி ஆப்பிரிக்க காட்டுப் பூனை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
SITES (S.I.T.E.S.) மாநாட்டின் மூலம் பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த காட்டுப் பூனை, இலங்கையின் “சிறுத்தை” போன்ற விலங்கு எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த காட்டுப் பூனைகள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதாகவும், இதன் காரணமாக சர்வதேச ரீதியில் இவற்றுக்கு அதிக கிராக்கி நிலவுவதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கண்டியில் வசிக்கும் ஒருவரே இந்த ஆப்பிரிக்க காட்டுப் பூனையை இந்த நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இலங்கை சுங்கத்தின் பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவு மற்றும் வனவிலங்கு திணைக்களம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.