மஹிந்தவுடன் இணைந்து இருப்பதற்கான காரணத்தை வெளிப்படுத்திய ரணில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அரசியல் யுத்தம் இருந்த போதிலும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான போது தாங்கள் இணைந்து செயற்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் 27வது ஆண்டு நிறைவு விழாவில் நேற்று (06) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கிய போது பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்த போதும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்கவில்லை.
நாடு நெருக்கடிக்கு உள்ளாகும் போது ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய பொறுப்பு பிரதான கட்சிகளுக்கு உண்டு எனவும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
பொதுஜன பெரமுனவின் கூட்டங்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டங்களுக்கும் தன்னால் செல்ல முடியும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாங்கள் எதிர் பக்கங்களில் இருந்தோம், நாங்கள் ஒன்று சேரவில்லை. அந்தப் போர் எப்போதும் இருந்தது. ஆனால் இன்று நான் ஏன் இங்கு இருக்கிறேன், நான் சந்திரகாவுடன் இணைந்து பணியாற்றும் போது, ஏன் என்று யாரும் கேட்கவில்லை.
2020 கோவிட் காலத்திற்குப் பிறகு, நான் அவருடன் நாட்டின் நிலைமை குறித்து பேச நேர்ந்தது. நாம் IMF க்கு செல்ல வேண்டும் என்று நான் சொன்னேன், அவர் ஒப்புக்கொண்டார்.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் கவிழ்ந்தால் எதிர்க்கட்சித் தலைவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் யோசனை தெரிவித்துள்ளன. அது பாரம்பரியம் என்றேன். ஆனால் அவர் சென்ற பிறகு எதிர்க்கட்சித் தலைவர் அதை ஏற்கவில்லை.
இதை ஏற்க வேண்டிய கடமை அவருக்கு இருந்தது. என் நண்பன் அனுராவைக் கூட காணவில்லை. இரண்டு நாட்களாக பிரதமர் பதவிக்கு ஆட்களைத் தேடுகிறார்கள். பிரதமர் பதவியை ஏற்குமாறு கெஞ்சினார்கள்.
பிரதமர் இல்லாமல் இந்த நாட்டின் அரசாங்கத்தை நடத்த முடியாது. நான் கேட்கவில்லை, என்னை வரச் சொன்னார்கள். நான் ஆதரிப்பேன் என்றேன்… ஆட்சியை நடத்தினோம் அவ்வளவுதான். நானும் அவரும் இப்போது கிட்டத்தட்ட அரசியலை முடித்துவிட்டோம்.
ஒரு நாடு வீழ்ச்சியடையும் போது பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கடமை உள்ளது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.