அக்கினியுடன் சங்கமமான சம்பந்தனின் பூதவுடல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமானது.
இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை நடைபெற்றது
இரா.சம்பந்தனின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நேற்று முன்தினம் முதல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியை நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்றனர்.
குறித்த இறுதி கிரியை நிகழ்வு நிகழ்வுகளில் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலித்தினர்.
(Visited 28 times, 1 visits today)