ஸ்பெயினில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்புகள் : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!
இந்த கோடையில் ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேனரி தீவுகளில் அதிகளவில் டெங்கு நோய் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெனெரிஃபின் தலைநகரான சாண்டா குரூஸ் துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களுக்குள் டெங்கு நுளம்புகள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் மற்றும் பயணக் கப்பல்கள் வந்து செல்லும் பெரிய சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட ஒரு பகுதியைச் சுற்றி ஆபத்தான பூச்சிகள் அச்சத்தை ஏற்படுத்துகிறது என ஸ்பெயினுக்கான பயண ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)