பிரித்தானியாவில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த தொழிற்கட்சி – அமைச்சரவை அறிவிப்பு
பிரித்தானியாவில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த தொழிற்கட்சியின் இருபத்தைந்து பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் புதிய அமைச்சரவையை அறிவித்துள்ள நிலையில் இதில் 11 பெண்களும் அடங்குவர்
துணைப் பிரதமராகத் ஆஞ்சலா ரேய்னர் (Angela Rayner) பொறுப்பேற்றார்.
பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சராக ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) பொறுப்பேற்கிறார்.
பிரித்தானியாவில் ஒரு பெண் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்பது இதுவே முதன்முறையாகும். டேவிட் லாமி (David Lammy) வெளியுறவு அமைச்சர் பதவியை ஏற்கிறார்.
புதிய சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்கும் வேஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting), பிரித்தானியாவில் தேசியச் சுகாதாரச் சேவை ஒழுங்காகச் செயல்படவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இளம் மருத்துவர்களின் சம்பள விவகாரம் குறித்த சர்ச்சை பற்றி அடுத்த வாரம் பேச்சு நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பிரித்தானிய தேர்தலில் எதிர்த்தரப்பு தொழிற்கட்சி மிகப்பெரிய பெரும்பான்மையோடு வெற்றிபெற்றது.
650 இடங்கள் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சி 412 இடங்களைப் பிடித்து அமோக வெற்றி பெற்றது.
பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.